வன்னிக் களமுனையில் நேற்றைய மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் பலி!

tiger-fighters-at-tharmapuram-fdl1வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி பதிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும்  உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் நடதிய தேடுதல் நடவடிக்கையின் போது படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களாக விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்கள் தவிர்ந்த நேரடி துப்பாக்கி மோதல்களில் நூற்றுக்கணக்கான படையினர் நாளாந்தம் கொல்லப்பட்டு வருவதாக பதிவு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.