ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

man_fireபுதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.

கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், இன்று  மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணம் அடைந்த பாலசுந்தரம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொத்தமங்களலத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாலசுந்தரம் உடலுக்கு தமிழின உணர்வாளர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.