இன்று கொழும்பை உலுக்கிய குண்டுச் சத்தங்கள்

sri-lanka160சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையே உலுக்கும் வகையில் இன்று காலையில் கேட்ட குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுக்கு கொழும்பு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற போர் ஒத்திகையே காரணம் என அந்நாட்டு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் சுமார் ஒரு அணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக இந்தச் சத்தங்கள் கேட்டன.

துறைமுகப்பகுதியில் இருந்து கேட்ட இந்த பாரிய சத்தங்களால் கொழும்பு நகரில் தாக்குதல் ஒன்று நடைபெறுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டன.

இதனால் துறைமுகப் பகுதியில் தாக்குதல் ஏதாவது நடைபெறுகின்றதா என்ற அச்சம் அதிகரித்தது.

இருந்த போதிலும் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் துறைமுகத்தின் மீது தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பான போர் ஒத்திகை ஒன்றே நடைபெற்றதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.