பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய விடுதலைப் புலித் தலைவர்கள் முல்லைத்தீவில்

e0ae95e0af8be0aea4e0aeaae0aebee0aeafe0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்படைத் தளபதி சூசை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் மறைந்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலித் தலைவர்கள் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சஞ்சரித்தமையை பொதுமக்கள் அவதானித்துள்ளதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விடுதலைப் புலிகளிடமுள்ள பகுதிகளை பூரணமாக மீட்டெடுப்பது குறித்த கால வரையறைகளை வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக  பகுதிகளை மீட்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.