சிறிலங்கா உற்பத்தி பொருட்களை புறக்கணிப்போம்; நிச்சயம் இதன் மூலம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

brisbaneஇன்றைய ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் காலைகள் மரணத்துடன்தான் விடிகின்றது. குறிப்பாக சிங்களப்படைகளின் வல்வளைப்பு யுத்தம் சிறிது சிறிதாக இன்று இன அழிப்பின் உச்சத்தினை எட்டி நிற்கின்ற நிலையில் சிறிலங்கா படைகளால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் என்னும் பகுதிக்குள் பாதுகாப்பு தேடிக் கொள்வதாக எண்ணி நுழைந்த மக்களின் நிலை எது என்பது புரியாதவர்கள் எவரும் இல்லை.

அந்த நிலையில் தமிழ் மக்களின் இரத்தத்திலும் சதையிலும் சிறிலங்கா அரசு தனது வாழ்க்கையை நடாத்தி கொண்டுள்ளது என்பது மிகத் தெளிவு. இதற்கு உலகத்தின் பல ஈவிரக்கம் அற்ற அரசுகளும் முண்டு கொடுத்து நிற்கின்றது அதற்கு பல விளக்கங்களும் சொல்லி நிற்கின்றது இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்காவின வடகிழக்கில் தமது தாயக நிலப்பரப்பினை கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் தமிழரை அகதிகளாக்கி அவர்களின் அபிவிருத்தி எனக்கூறி கொண்டும் வெளிநாட்டுப்பணங்களில் தமிழரின் இன அழிப்பு போரை முன்னெடுக்கும் பாரிய முயற்சியில் சிறிலங்காவின் பிரதிநிதிகள் இரவு பகல் பாராது செயல்ப்பட்டு வருகின்றனர்.

அதாவது ஓட்டை விழுந்து மூழ்கும் கப்பல் ஒன்றினை சிறிது நேரம் தக்க வைத்துக் கொள்வதற்கு கப்பல் பிரயாணிகள் சிலரை கடலில் வீசி அவர்களின் உயிரை தொலைத்து அல்லது கடலுக்கு இரையாக்கி அந்தக்கப்பலை பாதுகாப்பது போன்று தமிழ் மக்களை கொன்று தமிழ் மக்களின் உடலங்களை கணக்கெடுத்து அதன் மூலம் சிங்களவர்களை ஏமாற்றி பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்குள் சிக்கி மூழ்கும் கப்பல் போன்று உள்ள சிறிலங்காவை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்கா அரசு முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.

அதன் வெளிப்பாடுகள் அண்மைய நாட்களில் மட்டுமன்றி தமிழர் தாயகம் மீது போர் தொடுக்கும் ஒவ்வொரு அரசுகளும் கடைப்பிடித்திருந்தது. இந்த வகையில் தற்போதைய சிறிலங்காவின் இனவாத அரசு மிகத்துல்லியமான காய்நகர்த்தலுடன் பிராந்தியப்போட்டியை தனக்கு சார்பாக பயன்படுத்தி தமிழ் மக்களை ஒழிப்பதற்கு உலக நாடுகளை அனுசரணையாக்கி கொள்ள துடிக்கின்றது
.
இவற்றின் மூலம் சிங்களவர்கள் நன்மை அடையவில்லை. ஆனால் தமிழ் மக்கள் முற்று முழுதாக துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள். எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளவர்களாக இறுதி வழி போராடிப் பார்ப்போம் என்னும் முடிவுக்கு வந்தவர்களாக இவர்கள் போர்களத்தில் குதித்துக் கொண்டுள்ளார்கள்.

எனவே அவர்களை துன்புறுத்துவது சிறிலங்காவின் கொலை ஆயுதப்பிரயோகங்கள் என்பது அனைவரும் அறிந்துள்ள விடயம். பொருளாதாரத்தடைகள் மற்றும் மருத்துவத்தடைகளுக்கு பழகி விட்ட அவர்கள் அவற்றில் இருந்து மீளும் யுக்திகளையும் தெரிந்து கொண்டுள்ளார்கள்

அதாவது 30 வருட சிறிலங்காவின் இன அழிப்பு போரில் அவர்கள் பல அனுபவங்களை பெற்றுள்ளார்கள். இன்றும் சிறிலங்கா படையினர் பிரயோகிக்கும் கொத்துக் குண்டுகள் மற்றும் பல்குழல் எறிகணைகள் பயன்பாட்டால்தான் அவர்கள் அதிகம் பாதிக்கப்ட்டவர்களாக காணப்படுகின்றார்கள். பாதிக்கப்பட்டும் கொண்டுள்ளார்கள்.

சிறீலங்கா வெறும் 65000 சதுர கிலோமீற்றர் பரப்பு கொண்ட வளரும் நாடு. இவ் நாடு தனது மொத்த வளங்களையும் கொட்டி தமிழர் தாயகத்தினை அடக்கி அதன் வளங்களை சுரண்டி விட, வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விட துடிக்கின்றது.

அதாவது யுத்ததிற்கு எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை தமிழர் தாயக நிலத்தினை அபகரித்து விடவேண்டும். இதுதான் சிங்கள அரசியல் வாதிகள் மற்றும் இனவாதிகளின் முக்கிய எண்ணம். இவ் எண்ணத்துக்கு எண்ணெய் ஊற்றுவதற்காக சிங்கள பொதுமக்களுக்கு யுத்த வெறியை ஊட்டி நிற்கின்றது.

இந்த வகையில் சிறிலங்காவின் இவ் யுத்த வெறிக்கு நாங்கள் அதாவது புலம் பெயர் தமிழர்கள் ஆகிய நாங்களும் ஒரு காரணம் என்பது உங்கள் அனைவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

அதாவது சிறிலங்காவின் கல்லாப் பெட்டிகளை நிரப்ப நாங்களும் பல வழிகளில் உதவியிருக்கின்றோம் உதவியும் வருகின்றோம். அதனால் எமது மக்களின் மீது விழும் குண்டுகளுக்கு நாமும் முதலிட்டுள்ளோம். எமது குழந்தைகளை துளைத்த கொத்துக்குண்டுக்குள் எமது பணமும் உள்ளது. இங்கிருந்து நாம் அனுப்பும் ஒவ்வொரு டொலரும் ஒவ்வொரு பவுண்ஸ் ஒவ்வொரு பிராங்கும் எங்கள் மக்களின் இரத்தத்தில் தோய்க்கப்படுகின்றது.

இதை விடக் கொடுமை என்ன இருக்கமுடியும். அதாவது தன்னினம் உண்ணும் பிராணிகள் வர்க்கத்துக்குள் அடக்கப்படக்கூடியவர்களாக நாம் உள்ளோம்.

சிறிலங்காவின் ஏற்றுமதிகள் என்னும் வலைக்குள் நாமாக அகப்பட்டு எமக்கு தெரியாமல் எமது மக்களை கொல்லவும் எமது நிலங்களை ஆக்கிரமித்து முகாமிடவும் நாம் அனுசரணையானராக இருந்துள்ளோம். இனியும் இதை தொடரக்கூடாது. தொடரவிடக்கூடாது என்பதை நாம் எல்லாரும் சரியாக புரிந்துள்ள நேரம் இது.

எனவே திடமாக நாம் உறுதியெடுத்து சிறீலங்காவற்குள் செல்லும் எம் கைகளாலும் எம் வியர்வையாலும் உருவான மொத்தப்பணத்தினையும் நிறுத்தவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சிறிலங்கா பலவகையான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது இவ் ஏற்றுமதிகள் பல புலம்பெயர் எம்மை இலக்காக கொண்டும் எம்மை நம்பியும் பொதியிடப்படுவது நீங்கள் அனைவரும் புரிந்துள்ளது. இது வரையும் நாம் இவற்றின் விழைவுகள் தெரியாது நுகர்ந்து வந்துள்ளோம்.

சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதியில் ஒன்று தேயிலை. சிறிலங்காவுக்கு இத் தேயிலை பெரும் வருவாயை மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நல்ல பெயரையும் தேடித் தந்து கொண்டுள்ளது அனைவரும் தெரிந்து வைத்துள்ளதொன்று.ஆனால் அந்த உற்பத்திகளுக்கு முதுகெலும்பாக உள்ள ஒரு தமிழ் சமூகம் அங்கு அலங்கோல வாழ்க்கை நடாத்திக் கொண்டுள்ளது எங்கள் ஒருவருக்கும் தெரியாது அல்லது தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி நாம் சிந்தித்து ஆராய்ந்தது கிடையாது.

எனவே சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது எவி விடப்பட்டுள்ள இனஅழிப்பு, புறக்கணிப்பு போருக்கு நாமம் நேரடியாக மற்றும் மறைமுகமாக உடந்தையாகி நிற்கின்றோம். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிறுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்னும் அறிவிப்புக்கள் ஏற்கனவே வந்துவிட்டது. இதன் மூலம் நாம் சாதிக்க போவது என்னும் கேள்விகளும் கூடவே நம்மில் பலருக்கு வந்துள்ளது. அதாவது நாங்கள் சிறிலங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணித்தால் எல்லாம் நடக்குமா இதன் மூலம் தமிழர் காக்கபடுவார்களா என்னும் கேள்விகள் இதில் முதன்மையானவை.

சிறீலங்காவின் இவ்வாண்டுக்கான பாதீடு 107,000 கோடிகளைக் கொண்டுள்ளது. இதில் போருக்கான ஒதுக்கீடு 24,000 கோடி அதில் மீண்டும் குறை நிரப் பிரேரணைகள் முலம் பல கோடிகள் இணைக்கப்படும். இப் பணம் முழுவதும் சிறிலங்காவின் வருமானத்தில் இருந்தோ அன்றி மக்களின் வரியில் இருந்தோ பெறப்படுவதில்லை. இது அனைவருக்கும் தெரிந்தது. சிறிலங்காவின் உள்நாட்டு உற்பத்திகள் என கூறுமிடத்து சில வெளிநாட்டுப்பயிர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் சில கனிமங்கள் மற்றும் ஆடைகள் தவிர வேறு எவையும் இல்லை. அல்லது புதிதாக சிறிலங்கா வேறு ஏற்றுமதிகளை செய்யும் நிலையிலும் தற்போது இல்லை.

எனவே இவற்றில் நாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள் மற்றும் அளவு என்பன ஒவ்வொருவராலும் தாமாகவே கணக்கு பார்க்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் நாம் சிறிலங்காவுக்கும் சிறிலங்காவின் யுத்த முனைப்புக்கு கொடுக்கும் பணம் எவ்வளவு என்பது உங்களாலேயே கணக்கிடமுடியும். அதாவது நாம் பெரும்பாலும் கொள்வனவு செய்யும் சிறிலங்கா தேயிலை மற்றும் சிறிலங்காவின் ஆடைகள் என்பனவே எந்த அளவிற்கு சிறிலங்காவிற்கு பணத்தினை வாரிக் கொட்டுகின்றது என்பதும் அந்த பணங்கள் குண்டுகளை கொட்டவே பயன்படுகின்றது என்பதும்.

அது மட்டுமல்லாமல் சிறிலங்கா ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கடந்த சமாதான காலத்தினை முன்னிறுத்தி 7000 பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வரிச்சலுகையை பெற்றிருந்தது. அதாவது தேயிலை உட்பட்ட சில பாரியளவான ஏற்றுமதிகளுடன் பல சிறிய ஏற்றுமதிகளையும் செய்வதற்கான வரிச்சலுகைகளை கொண்டுள்ளது.

அச் சிறு ஏற்றுமதிகள் அத்தனையும் புலம் பெயர் எங்களை மையமாக கொண்டவை என்பது நாம் சிந்திக்காத உண்மை. இவ்வாறான ஏற்றுமதி வரிச்சலுகை மூலம் கடந்த ஆண்டு சிறீலங்கா 17500 கோடிகளை இலாபமாக பெற்றிருந்தது. இது வரிச்சலுகை மூலமானது மாத்திரமே ஏற்றுமதி மூலமான இலாபம் வேறு. இவை அனைத்தும் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும்தான் தற்போது உள்ளது. அதாவது பணம் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும், வேண்டப்பட்ட பொருட்கள் தமிழர் தாயக நிலங்களை மண்மேடாக்க அங்கு கந்தக காற்றை கலக்க குருவிக் கூடுபோன்று பார்த்துக்கட்டிய வீட்டில் இருந்து எமது உறவுகளைக் கலைக்க பயன்பட்டுள்ளது. அந்த பணம் அனைத்தும் சிறிலங்காவின் யுத்த செலவில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த பணம் கொண்டு சிறிலங்கா தமிழர் தாயகத்தில் எந்த அபிவிருத்தி பணியும் செய்யவில்லை. கிழக்கினை ஆக்கிரமித்து அங்கு அபிவிருத்தி என்னும் பெயரில் சில கட்டிடங்கள் பாலங்கள் கட்டுவது கூட வெளிநாட்டு உதவிகளில் தான் என்பது சிறிலங்காவே பலமுறை கூறியுள்ளது.

சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதிகள் சிலவற்றின் விபரம் மற்றும் அவற்றின் இலாபங்களை நோக்குமிடத்து. சிறிலங்கா சராசரியாக வருடத்துக்கு பல பில்லியன் டொலர் பெருமதியான தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது. கடந்த வருடம் இது சற்று அதிகம். இது சிறிலங்காவின் உள்நாட்டு வருமானத்தில் 55 வீதத்திற்கு மேற்பட்ட தொகையை தருகின்றது என சிறிலங்காவின் பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சிறிலங்கா சராசரியாக வருடத்துக்கு 290 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது. சராசரியாக இரு மெற்றிக் தொன் 2500 டொலர் என்னும் வீதத்தில்.

ஆனால் கடந்த மாதம் சிறிலங்காவுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது தேயிலை ஏற்றுமதி மற்றும் சந்தை பெறுமதி என்பன வீழ்ச்சி அடைந்துள்ளது. இது சிறிலங்காவின் காலநிலையின் விளையாட்டை தொடர்ந்த புலம் பெயர் நாங்களும் விளையாடினால் சிறிலங்கா தலையில் துண்டைபோட்டு உட்கார வேண்டும். இதில் பெரும் பகுதி ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதாவது 35 வீதத்திற்கு மேல் அமெரிக்காவுக்கும் 15 வீதம் வரை ஐரோப்பிய மற்றும் ஐக்கியராட்சியம், 5 வீதம் வரை ஜேர்மனிக்கும் மற்றும் சிறிய அளவு இந்தியாவுக்கும் அனுப்பப்டுகின்றது.

இதில் எஞ்சியது ரஸ்யா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்கின்றது. மேலும் பல சிறிய அளவிலான ஏற்றுமதிகள் பிற நாடுகளுக்கு செல்லுகின்றது. இதில் இருந்து தமிழர்களாகிய நமது கொள்முதல் தன்மை மற்றும் நம்மால் சிறிலங்காவுக்கு செல்லும் அன்னியச் செலாவணி என்பனவற்றினை கணித்துக் கொள்ளலாம்

அடுத்து ஏனைய பொருட்களாக அதாவது வெளிநாட்டு செலாவணியை சிறிலங்காவுக்கு அள்ளிக்குவிக்கும் பொருட்கள் பற்றி நோக்கினால் இறப்பர் 14 வீதம் சிறிலங்காவின் உள்நாட்டு வருமானத்தினை நிரப்புகின்றது. இதை எவ்வாறு நாம் தடுப்பது என்னும் கேள்வி எம்மில் பலருக்கு வரலாம் ஆனால் அதற்கு முன்னரே சிறிலங்காவின் இறப்பர் உற்பத்தி மற்றும் சர்வதேச சந்தை என்பன இயற்கை மற்றும் சிறிலங்காவின் உற்ற நண்பன் ரஸ்யாவினால் பாழடிக்கப்பட்டு விட்டது செயற்கை இறப்பர் என்னும் ரூபத்தில்.

அடுத்து எங்களால் வருமானம் அள்ளிக் கொட்டுவது சிறிலங்காவின் தெங்குப் பொருட்கள் அதாவது சொந்த மக்கள் மீது குண்டு கொட்ட நாம் நன்கொடையாக வழங்கும் பணங்களை கொடுப்பதில் தென்னை உற்பத்திபொருட்கள் இது முற்று முழுதாக புலம் பெயர் எங்களை மையமாக கொண்டே சிறிலங்கா ஏற்றுமதியாளர்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன் முலம் உள்நாட்டு வருவாயில் சிறிலங்கா 5 வீதத்தினை பெற்றுக் கொள்கின்றது.
.
அடுத்து புலம் பெயர் நாங்கள் கொள்முதல் செய்யும் ஆபரணங்கள் பற்றி பார்க்கையில் சிறிலங்கா வருடம் தோறும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண உற்பத்தி மூலம் வருடம் 5500 மில்லியன் முதல் 6000 மில்லியன் வரை இலாபம் ஈட்டுகின்றது. இதில் புலம் பெயர் எங்களின் கைகள் நிரம்பியிருக்கின்றது. அத்துடன் ஜேர்மனி போன்ற நாடுகளில் நடாத்தப்படும் சிறிலங்கா ஆபரணக் கண்காட்சியை நாம் கண்டும் காணாமல் விடுவது அடுத்தது. இதனால் அவற்றின் சந்தை வாய்ப்புக்கு நாமும் வழிகோலி விடுகின்றோம். இது தவிர வாசனைத் திரவியங்கள அதாவது கறுவா கராம்பு ஏலம் போன்றவற்றுடன் வேறு சில பழவகைகள் முழுக்க முழுக்க எங்களை நம்பி அதாவது புலம் பெயர் தமிழர்களை நம்பித்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இது தவிர ஆடைகளின் மூலம் நாம் சிறிலங்காவை வாழவைத்துக் கொண்டுள்ளோம். நாம் எமது ஆடைகளை தெரிவு செய்யும் போது சிறிலங்காவின் ஆடைகளை தரம் கருதி மற்றும் அது ஏற்கனவே பெற்றுள்ள நற்பெயர் கருதி தெரிவு செய்து எமது மானத்தைக்காக்கும் போது தாயகத்தில் எம் தமிழ் பெண் ஒருத்தியை அல்லது பலரை துயிலுரிக்க துடிக்கும் சிறிலங்காவுக்கு பணம் கொடுக்கின்றோம் என்பதை சிந்திப்பதில்லை. மற்றும் துயிலுரித்தவர்களுக்கும் குழந்தைகளை கொல்லும் கொடியவர்கள் கஞ்சிகுடிக்கத்தன்னும் அதைக் கொடுக்கின்றோம் என நாம் சிந்திக்க வேண்டும்.

இதிலும் புலம் பெயர் எங்களின் கைகள் கணிசமான அளவு பங்கு நிற்கின்றது.அதாவது உலகத்தில் ஒருவனை ஏய்த்து பிளைப்பு நடத்துபவர்கள் மத்தியில் நாம் எம்மை அழகு படுத்தவும், நல்ல சுவையான உணவை உண்ணவும், எம் சொந்த மக்களை கொல்லுகின்றோம். எமது குழந்தைகள் தம் பிஞ்சுப்பாதம் படர நடக்க வேண்டிய நிலத்தில் அன்னியர் உலாவவும் குண்டுகள் வீழவும் நாம் பணம் கொடுக்கின்றோம். எம்மை வளர்த்துவிட்ட எமது பாட்டன், பூட்டன், பேரன், பேத்தி உலாவிய மண்ணை மலடாக்க கை கொடுக்கின்றோம்.இவை அனைத்தும் உண்மை இல்லையா?

இவ் சிறிலங்கா பொருட்கள் சேவைகள் புறக்கணிப்பில் இளையவர்கள் பங்கு மிகப் பெரியது.உங்கள் பெற்றேர் பலர் உங்களுக்காகவே வாழ்கின்றார்கள். உங்களை அழகு படுத்த உங்களுக்கு நல்ல உணவு தர உங்களுக்கான ஆபரணங்கள் வேண்ட என சிறிலங்காவின் பொருட்களை நுகர்கின்றார்கள். எனவே புலம் பெயர் ஒவ்வொரு இளையவர்களும் மனது வைத்தால் இந்த போராட்டத்தினை முற்று முழுதான வெற்றியாக மாற்றமுடியும் நீங்கள் சிறிலங்காவின் பொருட்களை தவிருங்கள். உடைகளை தவிருங்கள். ஆபரணங்களை தவிருங்கள். உங்கள் பெற்றோ தாமாகவே அவற்றை நுகர்வதை கைவிடுவார்கள். இளையவர்களே சிந்தியுங்கள். அங்கு உங்கள் போன்றவர்கள்தான் ஆயுதங்களை ஏந்தி எதிரிக்காய் காத்திருக்கின்றார்கள். நீங்களும் உங்கள் பெற்றோரும் விட்டு வந்த அடையாளங்கள் பறிபோகாமல் இருப்பதற்காய் அவர்கள் தங்களை ஈய்ந்து கொண்டுள்ளார்கள்.

சிறுவர்களே உங்கள் போன்றவர்கள்தான் அங்கு பட்டினியாலும் பல்குழல் எறிகணையாலும் தினமும் மடிந்து கொண்டுள்ளார்கள். எனவே அதை எல்லாம் நிறுத்த நீங்கள் முன்வர வேண்டும். வருவீர்கள். அதாவது எங்கள் சந்தோசம் செழிக்க நாம் இவ்வளவு நாளும் தெரிந்தும் தெரியாமலும் செய்து வந்த சிங்கள அரசுக்கான உதவிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தவேண்டும். இதில் முக்கியமான ஒன்று சிறிலங்காவின விமான சேவை. இதன் மூலம் தமிழர் ஆகிய நாம் சிறிலங்காவுக்கு வருடா வருடம் பெரும் தொகை பணத்தினை அள்ளி கொடுத்துக் கொண்டுள்ளோம். எம் தாய் நிலத்துக்கு நாம் பயணிக்கும் ஒவ்வொரு தடவையும் இதை நாம் செய்துள்ளோம். இனி இந்த தவறையும் நாம் தவிர்க்கவேண்டும் வேறு சேவைகளை நாடுவது சிறந்தது.

இவ் அனைத்தையும் எவ்வாறு செய்வது எவ்வாறு என்னும் கேள்விகளும் இதன் மூலம் நாம் அடையப்போவது என்ன என்னும் கேள்விகள் எம்மில் பலருக்கு வருவது இயல்பு. நாம் நுகரும் சிறிலங்காவின் பொருட்களை நிறுத்தினால் சிறிலங்காவின் அன்னியச் செலாவணி பெரிதும் பாதிப்படையும். இங்கு பொருட்களை மட்டும் நாம் நுகராது நிறுத்திவைப்பதை விடுத்து சிறிலங்காவில் நாம் முதலிட்டுள்ள அத்தனை முதலீடுகளையும் திரும்பி பெற்றுக் கொள்ளல் எமது மக்களை காப்பதற்று உதவும். இது நீங்கள் அனைவரும் புரிந்துள்ள விடயம். வியாபார ரீதியில் பார்த்தால் அது நட்டமாக அமையலாம். ஆனால் மனிதாபிமான மற்றும் தாய் நாட்டுப்பற்றுடன் எமது உறவுகளின் நிலையை எண்ணிப்பார்த்தால் நாம் என்ன செய்தாலும் போதாது என்னும் நிலை புரியும்.

உதாரணத்துக்கு சிறிலங்காவில் உள்ள எமது மக்களின் பங்கு முதலீடுகள் மற்றும் வங்கி முதலீடுகள் எனபன முக்கியமானவை. இதன் முலம் அதாவது பெரும்பாலும் வடகிழக்கு தமிழர் பணங்களின் வைப்பின் மூலம் சிறிலங்கா பெரும் இலாபத்தினை பெற்று வருகின்றது உங்களுக்கு நன்று தெரியும் இல்லாவிடின் கூடிய வட்டியை எவ்வாறு உங்களுக்கு அவர்கள் தருவார்கள். அதே நேரம் அண்மைய நாட்களில் சிறிலங்கா புலம் பெயர்ந்தவர்கள் வைப்புக்களை ஊக்குவிக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து சிறிலங்கா புலம் பெயர்ந்தவர்கள் பணத்தில் இருந்து பணம் பெறுகின்றது என்பது வெளிப்படை. எனவே இது தாய் மண்ணையும் மக்களையும் காக்கும் எங்கள் சாத்வீகப் போர் இதில் நாமும் சொந்த இலாபம் நட்டங்களை கருத்தில் கொள்ளக்கூடாது.

உண்ணாமல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது உயிர் நீத்த திலீபன் இனம் நாங்கள்.அவர் யாருக்காக உயிர் விட்டார் தனக்கா அல்லது தன் குடும்பத்துக்கா.அன்னை பூபதியின் குழந்தைகள் நாங்கள். எவ்விருப்பு வெறுப்பும் இன்றி கரும்புலியாக களப்புலியாக ஆண்களும் பெண்களும் விடுதலைக்காய் மடியும் தமிழ் இனத்தவர் நாங்கள்.
.
எம் சில விருப்பு வெறுப்புக்கு இடமளிக்காது சிங்கள அரசை சிக்கலில் மாட்ட கைகோர்த்து செயல்படுவோம். பலரது அதாவது சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் உணவுகள் பொருட்களை இது வரை நுகர்ந்தவர்கள் நுகர்ந்து பழகிப்போனவகள் பலர் எவ்வாறு இதைச் செய்யலாம் என சிந்திக்கலாம். அதாவது நுகர்தலை எவ்வாறு நிறுத்ததுவது எனச் சிந்திக்கின்றார்கள். தாய் நிலத்தில் எம் உறவுகள் படும் இன்னலின் ஒரு சிறுபகுதி கூட இல்லை நாம் இப் பொருட்களை நிறுத்தினால் அனுபவிக்க போவது.

உலகில் ஒரு பொருள் ஒரு நாட்டுக்கு உரியது என்று வரையறுக்கப்பட்டுள்ளதொன்று அவை பல நாடுகளில் இருந்து பெறப்படலாம் நாம்தான் எமக்கு ஏற்றவாறு எமது பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். தாயகத்தில் ஒரவரும் பல்குழல் எறிகணையுடனேயும் பதுங்கு குழிக்குள்ளும் பிறக்கவில்லை அவர்கள் அதற்காக தம்மை பழக்கிக் கொண்டுள்ளார்கள். பட்டினிக்காக தம்மை தயார் படுத்தி கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். ஏன் தாயகக் குழந்தைகள் மட்டும் பட்டினியால் இறக்கவேண்டும். பதுங்கு குழிக்குள் பிறக்கவேண்டும். அவர்கள் அதற்காகவே பிறந்தவர்களா. இவற்றினை சிந்தியுங்கள். நாம் செய்ய வேண்டியவற்றின் கனம் தெரியும்.

இவ்வாறு அம் மக்கள் வாழும் போது நாம் மட்டும் புதிய பொருட்களுக்கும் மாற்றீடுகளுக்கும் ஏன் எம்மை தயார் படுத்த கூடாது. அல்லது மாற்று நாடுகளை தெரிவு செய்து எமது தேவைகளை இறக்குமதி செய்யக் கூடாது. குறிப்பாக சொல்லப்போனால் சிறிலங்கா ஒரு அயன மண்டல நாடு. சிறிலங்காவின் விவசாய உற்பத்தியெல்லாம் இதை அடுத்துள்ள அத்தனை நாடுகளிலும் கிடைக்கும் எனவே அவற்றினை தெரிவு செய்து எமக்கான தேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ் பொருட்கள் சேவைகளை பெற்றுக் கொடுக்க வர்த்தகர்கள் முன்வராத விடத்து மக்கள் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் முடியாதது ஒன்றும் இல்லை. நாம் பலர் ஒன்று சேர்ந்த சிறிய முதலீடுகள் முலம் ஒரு இறக்குமதி நிறுவனம் ஒன்றை உருவாக்கி கொள்ள முடியும். இதில் எமது இளையவர்கள் குறிப்பாக வர்த்தகக் கல்வி கற்றவர்கள் களம் இறங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும். அதாவது இந்தியாவில் இருந்து பொருட்கள் உணவுகள் மற்றும் பழங்ளை நாம் பெற்றுக் கொள்ளலாம். தேயிலையை கூட சிறிலங்காவை தற்போது தரத்தில் முந்தி விட்ட கென்யாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அது போல் ஆடைகள் என அனைத்தையும் சிறிலங்கா தவிர்ந்த வேறு நாடுகிளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நாம் இதில் அருந்து எம் மக்களை காப்பாற்ற வழி ஒன்றை உருவாக்கலாம். இங்கு நாம் ஒன்றை குறிப்பிட வேண்டும். கோதுமை முதல் மஞ்சள் கறுவா இஞ்சி கடுகு மிளகு வரைக்கும் எம் தாய்நிலத்தில் செய்கை பண்ணி வெற்றி கண்டு விட்டார்கள். அன்றும் வட்டுக் கோட்டையில் கோதுமை விளைந்த நிலம் உள்ளது. அடுத்த விதைப்புக்காய காத்திருக்கின்றது. கறுவா மரம் மீசாலையில் நிமிர்ந்து நிற்கின்றது. மிளகும் கடுகும் வளர்ந்து நிற்கின்றது. தாயகத்தில் இது நம்மில்; பலருக்கு தெரியாது அதாவது எமது தாய் நில மக்களின் விடாமுயற்சி எதைக்கண்டும் அஞ்சாது எதற்றும் சளையாது போராடும் தன்மை எம்மில் பலருக்கு தெரியாது.அதாவது இயற்கையின் எல்லைகளையே அவர்கள் விடாமுயற்சியால் உடைக்கும் தன்மை கொண்டவர்கள் அவர்கள்.

இன்று எரிபொருளுக்கு பதிலாக தாவர எண்ணெய் பயன்படுத்தி புளங்காகிதம் அடையும் வெளிநாட்டவர் 1990 களிலே தாயகத்தில் தமிழர் இதைச் செய்து விட்டதை தெரிந்திரார். செவ்விளை தேங்காய் எண்ணெய்யில் வாகனம் ஓட்டியதையும் அற்ககோலில் வாகனம் இயக்கியதையும் அறியார். நம்மில் பலரும் இதை தெரிந்திரார்.இவை யெல்லாம் அவர்களுக்கு ஒருவரும் கற்றுக் கொடுக்கவில்லை சிறிலங்காவின் அடக்கு முறைக்கும் பொருளாதார தடைக்குள்ளும் உள்ளபோது அவர்கள் தாமாக கண்டு பிடித்தவை. இன்று எம்மை பார்த்து நிற்கின்றார்கள். எம் கைகள் சொற்களில் எதையோ தேடி நிற்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் நாம் அவர்களை தூக்கி விட்டால் எம் நிலத்தின் விடுதலைக்கு வித்திட்டால் அவர்கள் நாளை நம் நிலத்தை பயன்படுத்தி எமக்கு பரிசாக தருவார்கள். இது கடந்த காலங்களில் பல உலக நாடுகளே கண்டு வியந்த உண்மை.

எத்தனை நாளைக்கு நாம் தீயில் ஆகுதியாகி எமது விடுதலையை சொல்லி நிற்கும் தியாக தீபங்களை பார்த்திருக்கப் போகின்றோம் அவர்களின் தியாகங்களை போற்றி நிற்க போகின்றோம். அவர்களின் தியாகங்கள் அளப் பெரியது இவற்றை செய்தியாக பார்த்து நாம் புளங்காகிதம் அடைவதை விடுத்து நாம் எவ்வாறு எம் தாய் மண் விடிய பங்காற்ற போகின்றோம் என எவரும் சிந்திப்பதில்லை. மற்றவன் மூட்டும் கூதலில் குளிர்காய்வது எத்தனை நாளைக்கு. எம் வீட்டு முற்றத்தில் எம் தாய் நிலத்தில் கண் மூடி துயில் கொள்ளும் நாள் வர நாம் என்ன செய்யப்போகின்றோம்.

தற்போது எம் எல்லோருக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தாய் மண் விடிய நாம் எல்லோரும் உதவி செய்யும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதை தவறவிடாது கைகோத்து செயல்படுவோம். இதை சரியாக பயன்படுத்தி நாம் எல்லோரும் சிறிலங்காவின் பொருட்கள் சேவைகளை புறக்கணித்தால் பெருளாதார ரீதியில் பெரும் அழுத்தத்தினை சிறிலங்காவுக்கு நிச்சயம் கொடுக்கலாம்.

இது மட்டுமல்லாது நாங்கள் பொருட்கள் சேவைகளை புறக்கணிப்பதுடன் புலம் பெயர் நாடுகள் தவிர்ந்த இந்திய தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏனைய நாடுகளின் மனிதாபிமானம் மிக்கவர்களையும் சிறிலங்காவின் அடடூழியங்களை புரிய வைக்கவேண்டும். அவர்களையும் அந்த பொருட்களை புறக்கணித்து சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க உதவும் படி தெளிவுபடுத்த வேண்டும். அல்லது இலாப நோக்கற்ற மக்கள் முதலீட்டுடன் கூடிய தமிழர் நிறுவனங்கள் மூலம் சிறிலங்கா தவிர்ந்த வேறு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வழங்கினால் சிறிலங்காவின் பொருட்கள் தானாக காணாமல் போய்விடும்.

நம் மண் விடிய நாம் உண்ணா நோன்பிருந்து போராடினால் எம் தாய் நில மக்களுக்கு உணவு கிடைக்குமா உண்ணா நிலையியை மற்றவரை கவர பயன்படுத்திக் கொண்டு, பொறுத்தது போதும் பொங்க வேணும். சிறிலங்கா பொருட்களை தவிர்க்க வேண்டும் என எல்லாத்தமிழரும் களத்தில் இறங்கினால மகிந்தவும் தம்பியரும் விழி பிதுங்கி நாட்டை விட்டு ஓட்டமெடுக்க செய்யலாம்.

இது வரை ஓய்திருந்த கரங்கள் இணைந்து போராட புதியகளம் ஒன்றை கண்டு பிடித்துள்ளோம். நிச்சயம் இதன் மூலம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். என்பது வெளிப்படை இதை சரிவரச் செய்தால் வெகு விரைவில் இதன் அறுவடையை நாம் காணலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.