மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் மினி முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

ltte_devipuram_out1மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலடி – பதுளை வீதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது,

செங்கலடி – பதுளை வீதியில் உள்ள கோப்பாவெளிக்கும் புல்லுமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் மினி முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.