இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

c-my_collections-website-sivaji-7வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிடித்த வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் வாக்கு போட்டனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அந்தந்த தொகுதிகளில் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப் பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அரக்கோணத்தில் வருகிற 5-ந்தேதி ரஜினி ரசிகர் மன்ற பொதுக்கூட்டம் நடக்கிறது. அதிலும் இதே மாதிரியாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொருளாளர் என்.ரவி தெரிவித்தார். வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் வாக்குகளாக ரஜினி ரசிகர்களின் வாக்குகள் அமையும் என்றும் அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.