திருகோணமலையில் பாண் உட்கொண்ட போது விஷமடைந்ததால் பலர் மயக்கம்

இன்று காலை பட்டிணமும் சூழலும் அதனை அண்டிய பிரதேசத்தில் பாண் உட்கொண்ட போது விஷமடைந்தால் 50 பேருக்கு அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் திருகோணமலை தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறு பலர் அனுமதிக்கப்படலாமென ஜயம் வெளியிடப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகள் மாணவர்கள் எனவும் இவர்கள் திருகோணமலை பட்டிணமும் சூழலும் அதனை அண்டிய பாடசாலைகளில் இருந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு பாண் உணவாக கொண்டுவந்த மாணவர்களை அவற்றை உண்ண வேண்டாமென பாடசாலை நிர்வாகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இச்சம்பவத்தையடுத்து திருகோணமலை நகரத்தில் மக்கள் பதற்றமடைந்துள்ளதாகவும், பெற்றோர்கள் பாடசாலை முன்பாக குழுமியிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு விஷமடைந்த பாண் விநியோகம் செய்த வெதுப்பகம் திருகோணமலை பட்டிணத்திலே அமைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக வந்த தகவல்களின் படி இச்சம்பவத்தினால் வயது முதிர்ந்த ஒருவர் மரணமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு 1: பிந்திக் கிடைத்த தகவல்களின் படி 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.