இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்: ஐ.நா.

221548_1இலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றத் தலைவர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார். ¨

நேற்று மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த நவநீதம் பிள்ளை, இலங்கை நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதை மீண்டும் வலியுறுத்தப் போகிறேன் என்று தெரிவித்தார் நவநீதம் பிள்ளை.

இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.மன்றத்தின் கருத்து என்று தெரிவித்த நவநீதம் பிள்ளை, சிவிலியன்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.