பூனைக்கு விளையாட்டு..எலிக்கு உயிர் போகுது……வன்னியில் தினமும் 100 சனம் சாக..அதுக்கு எதுவும் செய்ய வக்கில்லாத சோனியாவின்ட அடிமை மற்றவர்களை பழித்து அறிக்கை

jaya_karuna248aஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’’டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள – காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.

அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் – அல்லது கையாலாகாதவர்கள் – இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் – முழங்கட்டுமே முரசம் – கொட்டட்டுமே பேரிகை.

இலங்கை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?

ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில் – 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடு – அட்வான்சாக ராஜ்ய சபா – இப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஒரு “வீரம் அல்லவா பொசுக்”கென வந்து விடுகிறது.

உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறி – மத்திய ஆட்சியிலே இருக்கும் காங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள் – தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள்.

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை.

அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்.

இந்த இலங்கை மீது படை யெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு – அவரையும் அழைத்துச் செல்லுங்கள்.

அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று – அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

எச்சரிக்கை. அவர் தவறிப்போய் 2002ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம் – தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வருவோமென்று – அதை நினைத்து ராஜபக்சேவுக்குப் பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.