பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் Srilankan Airlines பயணப் புறக்கணிப்புப் போராட்டம்

srilanken_logoநேற்று 24.03.2009 செவ்வாக்கிழமை பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் புறக்கணிப்புப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாரிஸ் நகரின் போர்த்து வேர்சாய் என்னும் இடத்தில் பிற்பகல் 16.00 மணிக்கு சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்டு வரும் Srilankan Airlines விமானத்தில் பயணம் மேற்கொள்ளுவதை தமிழ் மக்கள் உட்பட அனைவரையும் முற்றாக நிறுத்துமாறு கோரி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவ்விடத்தில் இளையோரால் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன, மற்றும் பதாகை வீதியோரத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இப் பதாகை மக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.