விமானப்படையினரின் இரு உலங்கு வானூர்திகள் மீது புலிகள் தாக்குதல்

சிறிலங்காவின் இந்த அறிவிப்பானது பாதுகாப்பு வலயத்தின் மீது ஏற்கனவே தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும்போதும், வெளிப்படையாக தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னேற்பாடாக அறிவிக்கப்பட்ட திட்டம் எனக் கருதப்படுகின்றது

bell212புதுக்குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரு பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்தியை விமானி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இவ்விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.