நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போயுள்ளார்

63734-interesting-architecture-colombo-sri-lankaதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போயுள்ளார். 
 
யாழ் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான இவர் மொரட்டுவவில் பட்ட பின்படிப்பான எம்.எஸ். ஸி கல்வியைத் தொடர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று பின் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள  மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்கு திரும்பிய போது இவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சென்ற மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற சுற்றாடலில் மீட்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.