சொல்கெய்ம் அவர்களே! தடைகளை உடைத்தெறிந்து புலிப்படை வெளிவரும் நாளும் வெகு தொலைவில் இல்லை

சொல்கெய்ம் அவர்களே! தடைகளை உடைத்தெறிந்து புலிப்படை வெளிவரும் நாளும் வெகு தொலைவில் இல்லை. ஏழு வருட காலத்தில் தமிழர் நிலப்பரப்புக்களில் இருந்த சிங்களப்படைகள் பிரபாகரனால் முற்று முழுதாக விரட்டி அடித்திருக்க முடியும்.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் முதல் யாழ்ப்பாணம் வரை சிங்களப் படைகளை குறுகிய கால இடைவெளியில் ஒடோட விரட்டியடித்தவர்கள் நோர்வே தூது வேலை பார்க்காமல் இருந்திருந்தால் நீங்கள் தமிழர்களை ஏமாற்றிய ஏழு வருட காலத்தில் தமிழர் நிலப்பரப்புக்களில் இருந்த சிங்களப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முற்று முழுதாக விரட்டி அடித்திருக்க முடியும்.

தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாததால் தமது சமாதான முன்னெடுப்பில் சவால்கள் தோன்றின. இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம். நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.யாரை யார் குற்றம் கூறுவது எம்தலைவரை பிடிவாதக்காரன் எனக் கூறுவதற்கு இந்த எரிக் சொல்கெய்ம் யார்????? சமாதானத் தூதுவர் என்றால் பொறுப்பில்லாமல் எதுவும் கூற முடியுமா???.

தமது சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அதீத ஈடுபாடு காட்டியதுடன் திருப்தியும் வெளியிட்டதாம். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்ததாம். தன்னைப்பொறுத்த வரையில் அமெரிக்கா இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக மறைமுக நோக்கங்கள் அற்ற நேர்மையான ஈடுபாட்டைக் கொண்டிருந்ததாம். சமாதான முயற்சிகள் யாவும் மிகவும் நுணுக்கமான முறையில் கையாளப்பட்டதாம்.  தம்மிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கமாட்டார்கள் என தாம் உறுதியாக நம்பினாராம். ஆனால் சமாதான முன்னெடுப்பில் இரு அடிப்படையான சவால்கள் காணப்பட்டதாம். அதில் முதலாவது இலங்கையரின் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைப் போக்கு. அடுத்தது தமிழர்களுக்கான தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமை. இதனைப் பல நிகழ்வுகள் தமக்கு உணர்த்தின என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழர்களுக்குரிய உரிமைகளை மட்டுமே சிங்கள இனவெறியர்களிடமும் உலக நாடுகளிடமும் கேட்டிருந்தாரே தவிர உங்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கவில்லை பிரபாகரன் கூட்டாட்சியை ஏற்கவில்லை ஆனால் அதனை விட மிகவும் இலகுவான நடைமுறைப் படுத்தக் கூடிய இடைக்கால அரசை நிறுவுமாறு உங்களிடம் கேட்டிருந்தார் அதனைக்கூட சொல்கெய்ம் அவர்களால் உருவாக்கி கொடுக்க முடியவில்லை. சொல்கெய்ம் அவர்களே இடைக்கால நிர்வாக சபையினை புலிகள் பரிந்துரைத்தது சமாதானப் பேச்சு வார்த்தை எந்தக் காரணங்களுக்காகவும் தடைப்படக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டே இடைக்கால நிர்வாக சபையின் யோசனை தலைவரினால் முன்வைக்கப்பட்டதே தவிர அதில் எந்தவிதமான சூழ்ச்சியும் இருந்திருக்கவில்லை தமிழரின் தாயக பூமியான வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பரப்பை சமாதான காலத்தில்தான் சிங்கள அரசினால் தனித்தனி மாநிலங்களாக இந்திய சூனிய அரசின் துணையுடன்  பிரிக்கப்பட்டது இந்த நடவடிக்கைக்குக் கூட எதுகுமே செய்ய முடியாமல் சொல்கெய்மின் சமாதானத் தூதுக்குழு திணறிப்போனது.

வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கமுடியாமல் போக இந்தியாவின் அறிவுறுத்தலின் படியே அதனைக் கண்டுகொள்ளாமலும் விட்டிருந்தது பிரிந்த மாநிலங்களையே இணைக்க தகுதியில்லாத சமாதான தூதுக்குழு தமிழர்களுடைய இனப்பிரச்சினையை கூட்டாச்சி முறையில் தீர்த்து வைத்திருப்பார்களாம் அதற்க்கு தமிழீழ தேசியத் தலைவர் தயாராக இருக்கவில்லையாம் இது என்னய்யா பாம்பாட்டிக்கதை போல கிடக்குது?  சரி போகட்டும் அப்பொழுது தலைவர் கூட்டாச்சிக்கு தயாராக இருக்கவில்லை அப்படியானால் இப்பொழுதுதான் ஏராளமானவர்கள் கூட்டாச்சிக்கு தயாராக இருக்கிறார்களே அவர்களிடம் அந்த கூட்டாச்சியை பெற்றுக்கொடுப்பதில் என்ன சிக்கல் உங்களுக்கு இருக்கப் போகிறது இப்பொழுது யார் கூட்டாச்சி வேண்டாம் என்று அடம்பிடிப்பவர்கள் தயவு செய்து சொல்கெய்ம்மிடம் யாராவது இதைப்பற்றி கதைக்க முடிந்தவர்கள் விசாரித்துப் பார்க்கவும்.

விடுதலைப் புலிகள் மிகவும் பலம்மிக்கதொரு நிலையினை அடைந்திருந்த வேளையில் மிகவும் நேர்த்தியாகவும் உலக போர் விதிமுறைகளில் இருந்து சிறுதுளியளவும் விலகாது அந்த சட்ட நேர்கோட்டில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களான உலக வல்லரசுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் முதல் யாழ்ப்பாணம் முகமாலைத்தாக்குதல் வரை நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களினால் 2000ம், 2010இல், 2020இல், என்று பல தடவைகள் வல்லரசாகிறோம் என பகல்கனவு கண்டுகொண்டிருக்கும் இந்தியாவையே நடு நடுங்க வைத்தது தங்களுடைய சுய நலனுக்காகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இந்தியாவின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகதமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதர்க்கான வேலைத்திட்டம் நோர்வேயினால் தந்திரமாக நரித்தனத்துடன் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நோர்வேயினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள் தோன்றின காலப்போக்கில் சமாதானப் பேச்சுவார்த்தையே தமிழ் மக்களின் இன்றைய பின்னடைவிற்கும் அவலநிலைக்கும் காரணமாக அமைந்து விட்டது.

சூழ்ச்சிகளும், தந்திரங்களும், காட்டிக்கொடுப்புக்களும், துரோகத்தனங்களும், போட்டிகளும், பெறாமை, நான்தான் பெரிது, நீ சிறிது, பேராசை, குடும்ப சுயநலம்மிக்க, மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசை, போன்ற பேராசைக் காரர்களின் சூழ்ச்சிகள் நிறைந்த செயற்பாடுகள் காரணமாக எமது விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாது பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மீண்டும் எப்பொழுது எப்படி என்பதெல்லாம் யாரும் கணக்கிட முடியாதவை அது அந்த மாபெரும் மனிதருக்கே தெரிந்தவை தடைகளை உடைத்தெறிந்து புலிப்படை வெளிவரும் நாளும் வெகு தொலைவில் இல்லை.

சொல்கெய்ம் அவர்களே!

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் முதல் யாழ்ப்பாணம் வரை சிங்களப் படைகளை குறுகிய கால இடைவெளியில் ஒடோட விரட்டியடித்தவர்கள் நோர்வே தூது வேலை பார்க்காமல் இருந்திருந்தால் நீங்கள் தமிழர்களை ஏமாற்றிய ஏழு வருட காலத்தில் தமிழர் நிலப்பரப்புக்களில் இருந்த சிங்களப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முற்று முழுதாக விரட்டி அடிக்கப்பட்டிருப்பார்கள்.

உங்களாலும் உங்களுடைய அரசினாலும் உலக அரசுகளின் சதி முயற்ச்சியாலும் ஆரம்பிக்கப்பட்ட சமாதான(சதி) பேச்சுவார்த்தை மட்டும் கைச்சாத்திடப் படாமல் இருந்திருப்பின் எம்மை அழிக்கவந்த அன்னியப் படைகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்க முடியும் தமிழினத்திற்கு ஏற்ப்பட்ட அழிவுகளும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் காலம் தமிழரின் தலை எழுத்தை நோர்வேயின் சமாதான(சதி) பேச்சுவார்த்தை மூலம் மாற்றி அமைத்துவிட்டது, நோர்வேயின் சமாதான(சதி) பேச்சுவார்த்தை மட்டும் ஆரம்பிக்கப் படாமல் இருந்திருப்பின் சிங்கள இன வெறியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும், கடல்ப்பரப்பும், வான்பரப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டு தமிழர் நிலப்பரப்புக்களில் இருந்த சிங்களப்படைகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பார்கள் தமிழீழ தேசமும் அமைக்கப்பட்டிருக்கும் தமிழீழத்தின் தமிழ்ப் பெருந்தலைவரின் சிறப்பான ஆட்ச்சியின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கும் உலகத் தமிழர்கள் தமது சொந்த நாட்டில் தமது சொந்த விமான நிலையத்தில் தரையிறங்கி சுதந்திர மனிதர்களாக சுதந்திர தேசத்தில் என்றும் எப்பொழுதும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் அனைவரும் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து எமக்கான தனிநாட்டில் வாழ்ந்திருப்போம். காலம் எம்மினத்தில் புகுந்து விளையாடி விட்டது, இனி வரும் காலங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து தமிழரை வாழவைக்கும்.

இப்பொழுதும் ஒன்றும் முடிந்துபோய் விடவில்லை நோர்வேயின் சமாதான தூதுக் குழுவாக இருந்தாலும் சரி உலக நாடுகளாக இருந்தாலும் சரி உங்களுடைய சதிவலைக்குள் அவரை சிக்கவைக்க முடியாது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் அவரின் தெளிவான சிந்தனை செயற்பாடுகளுக்கு அமைவாக வெகு விரைவாக தமிழர்களுக்கான தனித் தமிழ் ஈழம் அமையப்போவதை எத்தனை தடவை வல்லரசாகிய நாடுகளாலும் தடுக்கவும் முடியாது அதை தவிர்க்கவும் முடியாது.

– தி .தமிழரசன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.