ஈழம் தொடர்பான திட்டங்கள் குறித்த விபரங்கள் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டுள்ளது ‐ பாதுகாப்பு தரப்பினர்

srilanka_armyநீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் திருகோணமலை ஊடாக கதிர்காமம் வரை 12 பிரதேசங்களை விடுவித்து, இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகளின் தலைவரினால் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்த பாரிய ஈழம் தொடர்பான திட்டங்கள் குறித்த விபரங்கள் முல்லைத்தீவில் உள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குழியொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

 நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,வவுனியா, மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்கள் ஈழத்திற்குரிய பிரதேசம் எனவும் இந்த அனைத்து பிரதேசங்களுக்கும் பிராந்திய நகரங்கள் எனப் பெயரிடப்பட்டிருந்தாகவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.

அத்துடன் மதவாச்சி மற்றும் பொலனநறுவை ஆகிய பகுதிகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. தமிழ் நில அளவையாளர்களின் உதவியுடன் புலிகள் இந்த எல்லைகளை வரைந்துள்ளனர் விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு கிரேட் மாஸ்டர் பிளேன் என பெயரிட்டிருந்ததாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.
 
எது எப்படி இருந்த போதிலும் ஈழ வரைப்படத்தை புலிகள் பகிரங்கமாக வெளியிட்டு வந்ததுடன் அவற்றில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.