விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பொன்னம்மான், ஆனந்தன், கீர்த்திகா, செல்வி மோதல்களில் பலி ‐ கூறுகிறது இராணுவம்

slaவிடுதலைப்புலிகளின் கண்ணிவெடி பிரிவின் பொறுப்பாளர் பொன்னம்மான், கரும்புலிகள் பிரிவின் ஆனந்தன் மற்றும் கீர்த்திகா மற்றும் புலிகளின் மருத்துவ பிரிவின் பொறுப்பாளர்  செல்வி ஆகியோர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் செல்வி என்பவர் விடுதலைப்புலிகளின் தளபதி லக்ஷ்மனின் மனைவி எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.

அதேவேளை நேற்று படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் கரும்புலிகள் பிரிவின் உறுப்பினர் ஆனந்தன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பு மேலும் கூறியுள்ளது. எனினும் இந்த புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.