அப்பாவை (ராஜீவ்காந்தி) கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’: ராகுல்காந்தி

rahul-gandhi-smallபுதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை.

இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது,

‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார்.”தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத் தந்தையையும் கொன்றது என்பதால் அதன் மீது துளியும் பற்றின்றி இருக்கிறேன்” என்றார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து கேட்டதற்கு “இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிடாது. அவர்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார் அவர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.