கோதபாய, சட்ட மா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிராக வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

ltte_atrocities_20061201_gotabhaya_rajapaksa_091சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் ஊடாக வித்தியாதரன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, சட்ட மா அதிபர், காவற்துறை மா அதிபர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொறுப்பாளர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் ஏ.ஜீ.ரீ.பி. விஜேரட்ன ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.