சட்டத்திற்கு முரணான வகையில் தம்மை கைது செய்துள்ளதாக வித்தியாதரன், பாதுகாப்பு தரப்பினர் மீது வழக்கு தாக்கல்

vithyatharanசட்டத்திற்கு முரணான வகையில் தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளரும், சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
முன்னணி சட்டத்தரணி ஒருவரின் ஊடாக வித்தியாதரன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்ட மா அதிபர், காவற்துறை மா அதிபர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொறுப்பாளர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் ஏ.ஜீ.ரீ.பி. விஜேரட்ன ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.