பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான சான்றுகள் உள்ளன: ஜோன் ஹோம்ஸ்

e0ae9ce0af8be0aea9e0af8d-e0aeb9e0af8be0aeaee0af8de0aeb8e0af8dபாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரசேதங்களில் அரசாங்க இராணுவத்தினால் எறிகணை தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைப் பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்ககையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க படையினரின் இந்த எறிகணை வீச்சுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத பாதுகாப்பு வலயப் பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றமையை அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் காண்பிக்கப்பட்ட, மோதல் பிரதேசங்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொது மக்கள் தொடர்பான புள்ளி விபரங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாகவும் ஜோன் ஹோம்ஸ் இதன் போது தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.