பலமான விடுதலைப்புலிகள் அமைப்பை உடனடியாக அழிப்பது கடினமானதாகும் – கருணா

e0ae95e0aeb0e0af81e0aea3e0aebeவிடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும்.

புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.