சர்வதேச தொண்டு நிறுவனங்கள், போரை விரைவாக முடிக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன! – இலங்கை இராணுவ இணையத்தளம் தெரிவிப்பு

srilanka_armyவன்னியில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் வீதம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தமும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை இராணுவ அமைச்சகத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு வலயங்களில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என கூறுவது முற்றிலும் தவறானது.

விடுதலை புலிகளுடன் சேர்ந்துகொண்டு இயங்கும் சில சர்வதேச உதவி அமைப்புக்கள், எமக்கு முட்டுக்கட்டை போடுவதால், எம்மால் இப்போரை விரைவாக முடிக்கவிடாமல் போகிறது. இந்த யுத்தத்தை நீடிப்பதில் புலிகளை தவிர்த்து சர்வதேச மற்றும் உள்ளூர்  உதவி அமைப்புக்களும் நன்கு திட்டமிட்டு செயல்படுகின்றன. யுத்தம் விரைவாக முடிவடையுமானால் தமது வருமானம் போய்விடும் என இவ்வமைப்புக்கள் கருதுகின்றன. அதலானேயே இவ் யுத்தத்தை நீடிப்பதில் அவை பெருமளவு அக்கறை செலுத்துகின்றன. அண்மையில் யுத்த களத்தில் இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிட்டதால் கொல்லப்பட்டவரை, கெயர் இண்டர்நேஷனல் அமைப்பு அவர் தனது ஊழியர் என கூறியுள்ளது.

அவர் விடுதலை புலி உறுப்பினர் என்பதாலேயே கொல்லப்பட்டார் என்பதே உண்மை!’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கெயர் இண்டர்நேஷனல் அமைப்பு தலைவர் நிக் ஒஸ்பர்ன், ‘நாங்கள் ஒரு ஊழியரை இழந்து விட்டோம், அவரது குடும்பத்துக்கு எங்களது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம், தற்போதைய சூழ்நிலையில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை என கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.