எமது உறுப்பினர் விடுதலைப் புலி அல்ல: கெயர் நிறுவனம்

careவன்னியில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட எமது நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த கருத்தை கெயர் தொண்டர் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக கெயர் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் நிக் ஒஸ்போன் தெரிவித்துள்ளதாவது:

எமது அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது அல்ல. எமது பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் போது நாம் கடுமையான விதிகளை பின்பற்றுவது உண்டு. நாம் இலங்கையில் 1950 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றோம்.

வறிய மக்களுக்கும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றோம்.

வன்னியில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட எமது நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த கருத்து தவறானது.

இக்குற்றச்சாட்டுக்களை குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள போதும் வடபகுதியில் எமது நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.

முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கெயர் அமைப்பைச் சேர்ந்த 24 வயதுடைய ஆர்.சபேசன் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.