மூன்று நாட்கள் பயிற்சியுடன் வன்னிக்களத்தில் ஊர்காவல் படையினர்

vanni_army_in_floodமூன்று நாட்கள் பயிற்சியுடன் சிறீலங்கா படையினரில் பலர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் நாடாளுமன்னற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகரவே இதைத் தெரிவித்துள்ளார்.

அத்துன், தமது சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த இந்தியப் படையினர் மீ்ண்டும் திருகோணமலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் சிறீலங்காவுக்கு பாதகமாகி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.