நாள்தோறும் மக்களை கொன்று குவித்துவிட்டு பொய்யுரைக்கும் சிறிலங்கா

sla1வன்னியில் நாள்தோறும் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து பொய்யுரைத்து வருகின்றது. ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய மிகச் அகோர வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின் போது 52 பேரின் உயிரிழப்புக்கள் மருத்துவமனையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாத்தளன், பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் அதிகளவில் மக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்ட நிலையில் சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் உடலங்களை புதைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை.

பெருமளவிலான மக்களை நேற்றும் படுகொலை செய்துவிட்டு தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றும் அங்குள்ள மருத்துவர்கள்தான் பொய் சொல்கின்றனர் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.