புலிகளின் கட்டுப் பாட்டுப்பகுதி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது: சிறிலங்கா அரசு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

rajapakseஇது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா தேசிய பாதுகாப்பு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவின் வடக்குப் பகுதியில் 35 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை ‘பாதுகாப்பு வலயமாக’ அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தது.

இதன் மூலம் எமது பகுதிகளுக்கு வந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனைத்து பாதுகாப்பு உறுதியையும் வழங்கி அவர்களைப் பொறுப்புடன் கவனித்து வருகிறது.

எமது பகுதிகளுக்கு இதுவரை வராமல் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை எம்மால் உறுதிப்படுத்த முடியாது. அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.