இலங்கையின் மனித உரிமை குறித்து குரல் கொடுப்பது இந்தியாவின் கடமை: ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டு

221548_11இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.புதுடில்லியில் இந்திய தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் மனித உரிமையும் சுதந்திரமும் எங்கெல்லாம் ஆபத்துக்குள்ளாகியுள்ளனவோ அங்கு அத்தகைய நிலைமையை மாற்றுவதற்கு ஆதரவு வழங்குமாறு அவர் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இலங்கை மற்றும் மியன்மாரில் உள்ள அச்சமூட்டும் நிலை குறித்து இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மனித உரிமை நிகழ்ச்சி நிரல் எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் கவலைக்குரிய விடயமாகின்றதோ அப்போதெல்லாம் தனியாகவும் ஏனைய நாடுகளுடனும் இணைந்தும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.