கோயம்புத்தூரில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய ஈழ அகதிகள் மீது தாக்குதல்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் வாழும் ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை அடித்து உதைத்து கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா அரசின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்தும் இதற்கு இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், அங்குள்ள ஈழ அகதிகள் இந்த உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இந்திய மத்திய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு திடீரென வந்த அடிதடி காவல்துறையினர் அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்துக் கலைத்ததாகவும் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.