ரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெயர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம்

kallanரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெயர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம், இவர் தெற்கில் ஒரு பிரபலாமான ஒரு ஊடகவியலாளராவர் இவர் இடம்பெயர்ந்த வன்னி மக்களின் ஐந்து  மடிக்கணனி மற்றும்  பத்து டிஜிட்டல் கமரா  உட்பட பெருமளவு பொருட்களுடன்  கைதுசெய்யப்பட்டுள்ளார், இவரை விடுவிக்க தற்போது அமைச்சர் மற்றும் மகிந்த மட்டத்தில் வேலை நடக்குதாம் ….தேசப்பிரேமி சமன்குமார ராமவிக்ரம என்ற செய்தியாளர் மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு சொந்தமான வாகனத்தில் சென்ற போதே அதனை சோதனையிட்ட காவற்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இந்து ஆலயங்களின் அகற்றப்பட்ட பொருட்களும் அவரிடம் இருந்தாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்களை கைப்பற்றிய காவற்துறையினர் செய்தியாளரை விடுவித்துள்ளதுடன் இது குறித்து தமது குறிப்பேடுகளில் எதனையும் பதியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்குள் அரசாங்கத்தின தொலைக்காட்சி, வானொலி நிறுவன செய்தியாளர்களை தவிர, சுதந்திரமான ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.