விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபா

z_p04-lowering-inflation02கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் விமானங்கள் மீது ரூபாய்களை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை எனவும் டொலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டொலர் மழையில் புலிகளின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும் பந்துல கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவுகள், கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடும் போது, 587 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாரிய செலவின் பிரதிபலனாக படையினர் நாட்டு வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளதாகவும் பயங்கரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்க இந்த பாரிய செலவுகள் செய்யப்படுவதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் விமானங்கள் மீது ரூபாய்களை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை எனவும் டொலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டொலர் மழையில் புலிகளின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும் பந்துல கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவுகள், கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடும் போது, 587 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாரிய செலவின் பிரதிபலனாக படையினர் நாட்டு வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளதாகவும் பயங்கரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்க இந்த பாரிய செலவுகள் செய்யப்படுவதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.