விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 500மீற்றர் பின்நகர்வு – லக்பீம நியூஸ்

lakbima_logo_outசிறீலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோரின் வழிநடாத்தலில் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும் இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும் இதனையடுத்து மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும் மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 20ம் கஜபாகு படையினர் மீதும் நான்கு அலைகளாக விடுதலைப்புலிகள் புயலென தாக்கியதாகவும் இவர்கள் தாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும் இலக்கு வைத்து தாக்கியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.