மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாதவாறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது

mathalan_shell_attack_21இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் பிரபல சட்டவல்லுனரும் மனித உரிமைவாதியும் சிவில் மனித உரிமைகள் அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவருமான கலாநிதி வி.சுரேஸ் ஜீரிஎன்னுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

peoples union for civil liberities   என்ற இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமைகள் அமைப்பின் தமிழ் நாடு புதுவைத் தலைவரான வி.சுரேஸ் இலங்கையில் தொடரும் யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் அனைத்து ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகத் தொழிற்படும் மகிந்த அரசாங்கம் சர்வதேச சட்டதிட்டங்;கள்; யாவற்றையும் மீறி பயங்கரவாத அரசாங்கத் தொழிற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதற்கெதிராக அனைத்திந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தமது அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜீரிஎன்னுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.