கடந்த சில தினங்களில் கொழும்பு புறநகர் பகுதிகளில் 280 தமிழர்கள் உட்பட 324 பேர் கைது

handcuffகடந்த வியாழக்கிழமை தொடக்கம்இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளான கம்பஹா, கட்டுநாயக்க பிரதேசங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 262 தமிழர்கள் அடங்கலாக 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பொரளையில் தமிழர் ஒருவர் கைது

கொழும்பு பொரளையில் உள்ள பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்த யாழ்ப்பாண தமிழர் ஒருவரை பொலிஸார் கடத்த வியாழக்கிழமையன்று கைது செய்தனர்.

இதன் பின்னர் இவர் பயங்கரவாத சந்தேகநபர் என்றும் வத்தளையில் உள்ள வீடொன்றில் இருந்து டி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது

கட்டுநாயக்கவில் நான்கு தமிழர்கள் கைது

கட்டுநாயக்க பிரதேசத்தில் வடக்குகிழக்கு பகுதிகளை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடையாளங்களை நிரூபிக்கத் தவறியமையே கைதுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கம்பஹாவில் தமிழர்கள் உட்பட்ட 301 பேர் கைது

இலங்கைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 257 தமிழர்கள் உட்பட்ட 301 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை வியாழக்கிழமையன்று மாலை 6 மணியில் இருந்து வெள்ளிக்கிழமையன்று காலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுகின்றனர்.

சிலாபத்தில் 13 தமிழர்கள் கைது

சிலாபம் பொலிஸார் கடந்த வியாழக்கிழமையன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிலாபம் நகரப்பகுதியில் வியாபாரத் தளங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர் என்றும் தமது ஆள் அடையாளங்களை நிரூபிக்கத் தவறியவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிலாபம் பொலிஸில் வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர்.

தங்காலையில் 5 தமிழர்கள் கைது

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை பொலிஸ் பிரிவில் சிங்கள கிராமங்களான வஸ்முல்ல-கொஹலான பகுதிகளில் உள்ள வீடுகளில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது 5 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அப்புத்தளை பகுதியில் இருந்து வேலைக்காக அம்பாந்தோட்டை பகுதியில் வந்து தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்கள் தென்பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களா என்பதன் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.