பொதுமக்களை படுகொலை செய்வது சிறிலங்கா இராணுவமே: ஐரோப்பிய ஒன்றிய நா.உ. குற்றச்சாட்டு

இலங்கையில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து காசா நிலைமையை சிறிலங்கா அரசாங்கமே உருவாக்கி வருவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் றொபேர்ட் இவான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

EU

EU

தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பாளராக பணியாற்றி இலங்கைக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருந்த இவான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் வடக்குப் பகுதியில் இராணுவ வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடி வரலாம். ஆனால் தனது சொந்த குடிமக்கள் நூற்றுக்கணக்கான- ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்தின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குலக நாடுகளால் மறைமுகமாக ஆதரிக்கப்படும் – போர்க் குற்றங்களால் தாக்குதல்களால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது சிறிலங்கா.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை கட்டுக்கதை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.

ஆனால் மருத்துவமனைகள் மீதும் நோயாளர் காவு வாகனங்கள் மீதும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருக்கிறது. இது காசாவின் நிலைமையை ஒத்ததாகும்.

மத்திய கிழக்கில் நடந்தவற்றுக்காக எப்படி எதிர்வினையாற்றினவோ அந்த எதிர்வினையை இலங்கையில் தற்போதும் நடந்து வரும் நிலைமைகளின்போது எதிர்வினையாற்ற தவறிவிட்டன.

அமெரிக்காவின் அபுகரீப் சிறையில் நிகழ்ந்தது போன்றே சிறிலங்காவின் தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் நிகழ்கின்றன என்றார் அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.