வன்னியில் படையினரின் தாக்குதல்களில் இன்றும் (திங்கள்) 112 பொதுமக்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்

vanni_20090330002வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இத்தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்களின் கூடார வதிவிடங்கள் மீதே சிறிலங்கா படையினர் இன்று பல நூற்றுக்கணக்கான எறிகணைகளை வீசியுள்ளனர்.

மேலும் 28 வயதுடைய உதயகுமார் சந்திரிகா எனும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொத்துக்குண்டு தாக்கியதில் படுகாயமடைந்ததால் அவரின் சிசு அரைகுறையாக வெளியில் வந்துள்ளது.

வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளிலேயே அதிகளவிலான மக்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

புலேந்திரன் பகிர்த்தனா (வயது 08)

முருகையா சின்னம்மா (வயது 45)

கந்தையா கேதீஸ்வரி (வயது 14)

முருகையா செல்வேந்திரன் (வயது 30)

முருகையா ரஞ்சனி (வயது 18)

மாரிமுத்து இலட்சுமி (வயது 65)

வேலும் மயிலும் சூரியகுமார் (வயது 36)

சூரியகுமார் கார்த்திகேசன் (வயது 05)

அரியதாஸ் விக்கினேஸ்வரி (வயது 32)

பொன்னையா சுப்பிரமணியம் (வயது 57)

ரவிக்குமார் சஜீவன் (வயது 11)

அருள்தாஸ் தர்சிகா (வயது 08)

தியாகராசா ஜிதா (வயது 48)

கனகராசா பிரதீபன் (வயது 20)

கனகலிங்கம் கோமதி (வயது 45)

கனகலிங்கம் வசந்தகுமாரி (வயது 16)

கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 17)

செல்வராசா ஜனார்த்தன் (வயது 16)

ஜெயராசா தர்மிலன் (வயது 12)

சூரியராசா வேல்விழி (வயது 39)

யோகநாதன் பிரதீபா (வயது 26)

மதியாவதனம் மணிவண்ணன் (வயது 29)

பூமிபாலு விமலாதேவி (வயது 39)

ஜெயராசா சுபாசினி (வயது 29)

ஜெயராசன் ரதீபன் (வயது 13)

செல்வேந்திரன் பத்மலோஜினி (வயது 30)

வரதராசா சின்னராசா (வயது 45)

இதயரூபன் கவிதா (வயது 32)

இதயரூபன் விதுசா (வயது 03)

கணபதிப்பிள்ளை ஜெதீஸ்வரன் (வயது 32)

சின்னராசா ரத்தினமணி (வயது 48)

துஸ்யந்தன் சுவீற்றி (வயது 22)

வரதராசா சின்னராசா (வயது 46)

முத்துசாமி வடிவேல் (வயது 47)

இராமலிங்கம் பிரதீபன் (வயது 18)

கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 16)

மேகநாதன் செலஸ்ரீனா (வயது 22)

லட்சுமிகாந்தன் மாரிமுத்து (வயது 67)

கந்தசாமி ரூபிகா (வயது 09)

செல்வராசா நிசாந்தன் (வயது 16)

மாடசாமி புவனேந்திரராசா (வயது 24)

கிருசாந்தி (வயது 10)

இராசு சிவகலா (வயது 25)

வீரசாமி நாகம்மா (வயது 70)

சர்வானந்தகரன் நிசாந்தி (வயது 24)

புவேந்திரமகாராசா பகிர்த்தனா (வயது 14)

மதியபரணம் ரோமியா (வயது 10)

மதியாபரணம் இந்திராதேவி (வயது 43)

மதியாபரணம் பார்த்தீபன் (வயது 14)

முருகையா செல்வேந்திரன் (வயது 25)

முருகையா ரஞ்சனி (வயது 19)

முருகையா சின்னம்மா (வயது 56)

ரவிக்குமார் சக்திவேல் (வயது 11)

கார்த்திகேயன் பிந்துசா (வயது 07)

பாலகுமாரன் பிரணவன் (வயது 09)

தேவதாஸ் கவிதா (வயது 10)

கோமகன் பிருந்தா (வயது 05)

செல்வநாதன் பத்மலோஜா (வயது 30)

கந்தசாமி ரூபிகா (வயது 11)

முத்துச்சாமி மணிவேல் (வயது 45) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.