இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனனின் முதலைக் கண்ணீர்

sivasankar-1823 ஆண்டுகளாக தொடரும் சிவில் யுத்தத்தினால் அப்பாவி பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

அகில இந்திய வானொலிச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்தள்ளார். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது போன்று

இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டிய இராணுவ தளபாடங்கள் மற்றும் தொழிநூற்ப வசதிகளை வழங்கி வன்னியில் உள்ள பொதுமக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யும் அதே சமயத்தில் தமிழர்களில் இரக்கம் காட்டுவது போன்று அறிக்கைகளையும் அனுதாபங்களையும் வெளிட்டுவரும் இந்திய அரசியல் மற்றும் அதிகாரிகளின் திட்டங்களில் ஒன்று மேனனின் கருத்தாகும்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளை கவலை வெளியிட்டுவரும்  வேளையிலும் இலங்கை படைகள் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய நிலைப்பாட்டுக்கு  வெளிவிவகார அமைச்சரின் கருத்து வேடிக்கையாக உள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு ஏற்படும் சரிவை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையான மேனன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்ற சகலவிதமான உதவிகளையும் வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். இந்த உதவிகள் அனைத்தும் தமிழ் மக்கள் அனைவரும் உயிரிழந்த பின்னர் சமாதி கட்டுவதற்குதான் உதவியாக இருக்கும்.

யுத்தம் காரணமாக இலங்கையில் அப்பாவிச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் மேனன் இது உண்மையில் தமிழினம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கான அமெரிக்கா எடுத்த முயற்சியாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.