இலங்கை இனப்படுகொலை – அருந்ததி ராய் ஆவேசம்

arundhati-roy_lg_htmlஇலங்கையில் தமிழ் இனத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு நேரடியான இனப் போரில் ஈடுபட்டுள்ளதாக பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் கூறியுள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள அருந்ததி ராய், சர்வதேச சமுதாயம் உடனடியாக இலங்கையில் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இந்தியாவில் உள்ள நாளேடுகளானாலும் சரி, சர்வதேச நாளேடுகளானாலும் சரி, அவற்றில் இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன என்பது பற்றிய செய்திகளே இடம்பெறுவதில்லை என்றும், இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களைக் கொண்டு பர்க்கும் போது, இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் விடுதலைப் புலிகளாக பாவித்து அவர்களை கொன்று குவித்து வருகிறது என்றும், தாங்கள் அப்பாவிகள் என்பதை இலங்கை தமிழர்கள்தான் நிரூபிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ராணுவம் மருத்துவமனைகள், அப்பாவி மக்கள் வசிப்பிடங்கள், அகதிகளாக வந்து தங்கியிருக்கும் பாதுகாப்பு பகுதிகள் ஆகியவற்றின் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் பகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் அப்பாவி தமிழர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ள அருந்ததி ராய், அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளியேற பாதுகாப்பு கிராமங்களை நிறுவியுள்ளது என்ற போதிலும் அவற்றின் காரணமாக எந்தப் பலனும் இல்லை என்று கூறியுள்ளார்.

கொழும்புவில் உள்ள தமிழர்கள் பற்றிய விவரங்களை அரசு சேகரித்து வருவது பற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் சமாரவீரா, இது தமிழர்களுக்கு எதிராகவே திரும்பிவிடும் என்றும், இலங்கை அரசு அனைத்து தமிழர்களையும் தீவிரவாதிகளாக பார்க்கிறது என்டூறும் கூறியிருப்பதை அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் பேர் பற்றி செய்திகள் வெளியிட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாகவும், இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் முற்றிலும் நசுக்கப்பட்டுள்ளது என்றும் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைb பற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு ஆயுத உதவி அளிப்பதன் மூலம் இந்தியாவும் உதவி செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ள அவர், இது உண்மை என்றால் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்து வரும் இந்த இனப்படுகொலை பற்றி தம்மைப் போன்றவர்கள் முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்கள் வெளிவராததே தாமதத்திற்கு காரணம் என்றும் அருந்ததி ராய் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.