சர்வதேச சமூகம் இலங்கையில் சமாதானத்தை கொண்டுவரவேண்டும்: பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் சமாதானத்தை கொண்டுவரவேண்டும் என புலிகளின் சர்வதேச பேச்சாளர் செல்வராஜா பத்மநாபன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ்னெட் இணையத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த மக்களை இலங்கை அரசானது மிருகத்தனமாக நடத்துகிறது என்றார்.

இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஒன்று அமுலுக்குவர சர்வதேசம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். வன்னியில் புலிகள் பொதுமக்களை மணிதக்கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை முற்றாக மறுத்த பத்மநாபன் அவர்கள், தாம் வாழ்ந்த சொந்த இடங்களை விட்டு வெளியேற விரும்பவில்லை எனக்கூறியுள்ளார்.

பல இராணுவ வதை முகாம்களையும், பல வருடங்களாக இயங்கிவரும், மற்றும்  பல இடைத்தங்கல் முகாம்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்கள், சென்று வதைமுகாம்களில் வாழத் தயாரில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். விடுத்லைப் புலிகளுக்கு போர்புரிவதில் அதிகநாட்டமில்லை என்றும் இருப்பினும் அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.