முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்சமர் எதுவும் நிகழவில்லை

nerudal-tamil-news1முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே சமர் எதுவும் நிகழவில்லை. மாறாக பொதுமக்கள் சென்ற மூன்று படகுகளை இலங்கை இராணுவம் தாக்கியழித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் முல்லைத் தீவில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை(30.03.2009) புதுமத்தளான் பகுதியில் இருந்து 4 படகுகளில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகுள் சென்றுள்ளனர். அதிகாலை வேளையில் அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சிலபடகுகள் கரைதிரும்பிய போதும் சுமார் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதில் பயணித்த அனைவரும் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உடலங்கள் சில முல்லைத்தீவு கடற்கரையிலும், ஏனையவை இராணுவ கட்டுப்பாட்டு பகுதி கடற்கரையிலும் ஒதுங்கியுள்ள நிலையில், அவ் உடலங்களை கைப்பற்றிய இராணுவம், அவை புலிகளின் உடல்கள் என தெரிவித்திருப்பதுடன் கடலில் பெரும் சமர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது, இதனை பல இணையத்தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் தாம் கடலில் எவ்வித மோதலிலும் ஈடுபடவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.