விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதியுடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

John Homesதமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதி செல்வராஜா பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் காரணமாக அங்கு தங்கியுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பேரவலம் தொடர்பாகவே கோம்ஸ் பத்மநாதனை சந்தித்து கலந்துரையாடியதாக கோம்ஸ் ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலிகக்காரவுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும் கோம்ஸ் பாலிகக்காரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக அந்த தகவல்கள் பாலிகக்கார மூலம் சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதியுடனான சந்திப்பை நோர்வே அரசு ஒழுங்கு செய்திருந்ததாக அரச தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.