‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர்மீது தாக்குதல் : அலுவலகமும் சேதம்

vaarauraika100மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியாகும் ‘வார உரைகல்;’ பத்திரிகையின் ஆசிரியரான புவி ரஹ்மத்துல்லாஹ் நேற்றிரவு வீட்டிலிருந்த வேளை, இனந்தெரியாத குழுவொன்று தாக்கியதையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியொன்றினால் மறைத்திருந்த சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரைத் தாக்கிய குழுவினர் அருகிலிருந்த பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று கணினி உட்பட சில உடைமைகளையும் ஆவணங்களையும் சேதப்படுத்தியதோடு தீ வைத்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பிரதேச பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.