போர் நிறுத்த நிராகரிப்பு தொடர்பில் ஐ.நா. பேச்சாளர் கருத்து கூற மறுப்பு

unவடக்கில் தொடரும் மோதல்களை நிறுத்துமாறு ஐ.நா. செயலாளர்நாயகம் பான் கீ மூன் விடுத்த அழைப்பை இலங்கை நிராகரித்தது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மைக்கல் மொண்டாஸ் கருத்து கூற மறுத்துவிட்டதாக இன்டர்சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரச இணையத் தளமொன்றில் சர்வதேச ரீதியிலோ மற்றும் எந்தவகையிலோ, வரும் அழுத்தங்கள் காரணமாக நாம் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை. யுத்தம் முற்று முழுதாக முடிவடையும் வரை நிறுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளமை குறித்து இன்டர்சிட்டி பிரஸ் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான ரீதியில் மோதல்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஐ.நா.வின் மனிதாபிமான பணிகளுக்கான உயர்மட்ட அதிபர் ஹோம்ஸும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.