புத்தாண்டு காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த புலிகள் முயற்சி : பிரிகேடியர் எச்சரிக்கை

newmilitary0spokesman_200_50“சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இக்காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது :

“வன்னியில் படையினரின் போர் முன்னெடுப்புக்களினால் ஆயுதம் மற்றும் ஆள் பலத்தை இழந்துள்ள விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்தி இராணுவத்தினரை மனரீதியாக பாதிப்படையச் செய்ய முயல்கின்றனர்.

இதற்காக எதிர்வரும் உற்சவக் காலத்தை அவர்கள் பயன்படுத்தவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருந்து புலிகளின் தாக்குதல் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.