சிங்களவனே சிங்களவனைக் கொல்லும் கொடூரம்

sarath-ponseka-_srilanka2இன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது, அங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் ஓர் கட்டளை “கண்டதும் சுடு”. அதாவது படையிலிருந்து தப்பி ஓடும் இராணுவ வீரர்களைக் கண்டால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போரில் மரணமடையும் இராணுவ வீரர்களை விட இவை பலமடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேவேளை கொல்லப்படும் இராணுவ வீரர்கள் கும்பலாக வெட்டிப் புதைப்பதற்கு என்று மன்னாரில் செயற்பட்டு வந்த ஊர்காவற் படையணி இப்போது முல்லைத்தீவைச் சுற்றி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு சடலங்கள் சேகரிக்கப் பட்டு வெட்டித் தாக்கப் பட்டோ எரிகப்பட்டோ வருகின்றது. உயரதிகாரிகளினதும் செல்வாக்கு தொடர்புள்ளவர்களதும் உடலங்கள் மட்டுமே வெளியில் அனுப்பப் பட்டு வருகின்றன்.

தங்களது உறவுகள் இராணுவத்தில் உள்ளனர் என நினைத்திருக்கும் சிங்கள மக்கள் இன்னமும் கள யதார்த்ததின் உண்மைத் தன்மையினை அறியாது இருக்கின்றனர். தயவு செய்து இதனை மொழிபெயர்க்கும் திறனுள்ளவர்கள் சிங்களம், ஆங்கிலம், மற்றும் வேற்று மொழிகளிலும், மொழிபெயர்த்து சிங்கள அரசு சிங்களவனை அழிக்கும் இச்செயலையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப் படுத்தவேண்டும்.

இறப்புக்கள், இழப்புக்கள் எமக்கு இருப்பது போன்றுதான் அப்பாவிச் சிங்களவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக களமுனைக்கு வருகின்றார்கள். அத்தோடு அவர்கள் சிங்கள அரசு சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு ஏமாற்றப் படுகின்றார்கள். புலி என்னும் மாயையை அரசியல் வாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். சிங்களவர்களும் தமிழருக்கு ஆதரவாக, சமாதான விரும்பிகளாக, சிங்கள அரசின் போர் வெறியை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் பெரும் பங்கு ஆற்றும். சிங்கள ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றன. சிங்களவனாக இருந்தால் என்ன, தமிழனாக இருந்தால் என்ன, கொல்லப் படுவது உயிர், மனித உயிருக்கு மதிப்பற்றுப் போகின்றது. இந்த உண்மையை உரத்துச் சொல்லுவோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.