தமிழ்நாடு கடற்றொழிலாளர் 24 பேர் சிறீலங்கா கடற்படையால் கைது

navy876534தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் 24 பேர் சிறீலங்கா கடற்படையினரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 600 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களில் 24 மட்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஏனையவர்கள் கரை திரும்பியிருப்பதாகவும், கண்காணிப்பாளர் மோகனன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பயணித்த ஆறு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட கடற் றொழிலாளர்களும், படகுகளும் யாழ்ப்பாணம் கரையோரப் பகுதிகளிலுள்ள சிறீலங்கா கடற் படையினரது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ஈழத்தமிழ் விவகாரத்திற்கு மட்டுமன்றி, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்படுதல், தாக்கப்படுதல், கடத்தப்படுதல், கைது செய்தல் என்பவற்றுக்குக்கூட ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க அரசு இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.