விடுதலைப்புலிகளை அடிப்படையாக கொண்ட JAFFNA என்ற ஹிந்தி திரைப்படம்

amitabh_bachanஇந்திய திரைப்பட இயக்குனர் சுஜித் சர்கார் விடுதலைப்புலிகளை பின்னனியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம் விடுதலைப்புலிகளை அடிப்படையாக கொண்டு, இலங்கையில் படமாக்கப்படும் முதல் இந்தி திரைப்படம் என சுஜித் சர்கார் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர்கள் தெரிவுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் சர்கார் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.