விடுதலைப் புலிகளை அரை மணி நேரத்திற்குள் அழித்துவிட முடியும் – பிரதமர்

dddதமிழீழ விடுதலைப் புலிகளை தமது படைகளால் அரை மணி நேரத்துக்குள் அழித்து விட முடியும் எனவும், ஆனால் பொதுமக்களைக் கருத்தில்கொண்டே அவ்வாறு செய்யவில்லை எனவும், சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொறணையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று (புதன்கிழமை) பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது அரசின் படை நடவடிக்கைக்கும், ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஆதரவு நல்க வேண்டும் எனவும் அவர் இந்த சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.

வன்னியில் சிறீலங்கா அரசினால் சிறுவர்கள், கர்பிணிப் பெண்கள், மூதாளர்கள் என நூற்றுக்கான பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்பட்டுவரும் நிலையில், பொதுமக்கள் மீது தமது அரசும், படைகளும் அக்கறையுடன் நடந்து வருவதாக ரட்ணசிறி கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.