மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் உதவி: ஐ.நா. அதிகாரிகள்

un1வன்னியில் பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதை இலங்கை அரசு நிறுத்தினால், அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கு சர்வதேச சமூகம் உதவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கோடி காட்டியுள்ளனர்.

இதன் மூலம் இலங்கை அரசு உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்தினால், அதற்கு மேலதிக உதவிகள் வழங்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியொருவர் இன்னர் சிட்டி பிரஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்துறையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான திறமைவாய்ந்த தொழில்துறை இலங்கையிடம் உள்ளது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு அவமானம் ஏற்படாத வகையில், பொதுமக்களை அங்கிருந்து எவ்வாறு வெளியேற்றுவது என்பது பற்றியும், விடுதலைப் புலிகளை அதற்கு இணங்கச் செய்வது பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசு யுத்த நிறுத்த வேண்டுகோள்களை நிராகரித்தமை குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மிச்செல் மொண்டஸ் கருத்துக்கூற மறுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.