அம்பாறையில் விடுதலைப் புலிகள் – சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் உக்கிர மோதல்: 11 அதிரடிப்படையினர் பலி

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய பெருமெடுப்பிலான தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த முதுநிலை அதிகாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள லகுகலை வனப்பகுதியில் தளமிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பெருமெடுப்பிலான தாக்குதலினை தொடுத்தனர்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையே இன்று காலை 8:30 நிமிடம் தொடக்கம் காலை 10:15 நிமிடம் வரை உக்கிர மோதல் இடம்பெற்றது.

இம் மோதலில் சிறப்பு அதிரடிப்படையின் முதுநிலை அதிகாரி ஒருவர் உட்பட 11-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இம் மோதல் சம்பவத்தில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.