BBC தமிழ் சேவையூடாக தனது வேலையை காட்டும் றோ

bbcபுல்மோட்டைக்கோ அல்லது திருமலைக்கோ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மக்களை இதுவரை காலமும் எந்த ஒரு ஊடகமும் சந்தித்து பேட்டி காண முடியாத சூழலில் முதல் முதலில் பிபிசி தமிழ் சேவையினர் இந்திய மருத்துவ குழு இருக்கும் புல்மோட்டையில் இருந்து பேட்டி கண்டு உள்ளனர் எனும் அடை மொழியோடு இதை தொடருகின்றேன்…

புல் மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை எத்திராஜ் அன்பரசன் என்பவர் தனது இந்திய தமிழில் மக்களை பேட்டி காணுகிறார்… பேட்டி காணும் போது அவர் மக்கள் சொன்ன பல விடயங்களை விட்டு விட்டு குறிப்பாக புலிகள் மீது குற்றம் சாட்டும் பாணியில் செய்தியை சேகரிக்க முயலுவதை வெளிப்படையாகவே காணலாம்… அங்கே மக்களில் பலரும் செல்வீச்சு கொடுமையாக நடக்கின்றது என்பதை சுட்டி காட்டும் போது அந்த கொடுமையான செல்வீச்சை நடத்துவது யார் எண்று ஒரு கேள்வி கூட அவர் கேட்க முயலவில்லை அல்லது அதைப்பற்றி அக்கறை கொள்ள இல்லை…

கேள்வி கேட்க்கும் நிருபரோ அல்லது வேறு இந்திய தமிழர்கள் யாரோ அந்த மக்களோடு பேசியபின்னர்( அச்சுறுத்தல்.?) தான் அந்த மக்களில் பலரும் பேட்டி அளித்து இருக்கிறார்கள்… அதை பேட்டி வழங்கிய மக்கள் தங்களது பேச்சு வழக்கை இந்திய பாணியில் மாற்றி கடினப்பட்டு வழங்குவதை கொண்டு உறுதிப்படுத்தலாம்( விடுதலைப்புலிகள் பற்றி குற்றம் சாட்டாத ஒரு பெண்மணிதவிர) … திடீர் என ஒருவரிடம் கேள்வி கேட்க்கும் போது அவர் தனது பேச்சு வழக்கை மாற்றி பேச மாட்டார் என்பதுக்கும் காரணம் இருக்கிறது… தனது பேச்சு ஒருவருக்கு புரியவில்லை எனும் பட்சத்திலேயே அவர் தனது பேச்சை கொஞ்சம் மாற்றி அவர்களுக்கு புரியும் வண்ணம் வழங்குவர்… இதை கொஞ்சம் நிதானமாக யோசிப்பவர்களுக்கு புரியும்…

அதிலே ஒரு பெண்மணி தனது பாணியை மாற்றாமல் அப்படியே நிகழ்வதை அழுகையோடு சொல்கிறார் அவரின் பேச்சு வழக்கில் எந்த மாற்றமும் இல்லை… அவர் புலிகள் பற்றி எதையும் சொல்ல வில்லை… காரணம் அவர் இந்த இந்திய பேட்டியாளர் குழுவின் அறிவுறுத்தலுக்கோ அச்சுறுத்தலுக்கோ ஆளாக இல்லை என்பது புரியும்..

ஆக மொத்தம் இந்திய உளவுப்பிரிவு தந்து வேலையை BBC எனும் ஊடகம் மூலம் காட்ட புறப்பட்டு விட்டது தெளிவு…

கேட்டு பாருங்கள்:
http://http-ws.bbc.co.uk.edgesuite.net/asx.esi?tamil/tx/nb/tam1545.wma

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.